நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கும்மியடி தமிழ்நாடு முழுவதும்

Kummiyati Thamilnaadu Muluvathum

Moses Rajasekar

கும்மியடி தமிழ்நாடு முழுவதும்

குலுங்கிட கைகொட்டி கும்மியடி – 2

நம்மை பிடித்த பிசாசுகள் போயின

இயேசுவை கண்டோம் கும்மியடி -2

இயேசுவை கண்டோம் கும்மியடி

இயேசு ராஜாவை கண்டோம் கும்மியடி

காத்து கருப்பு மாய மந்திரம்

ஒழிஞ்சி போச்சுன்னு கும்மியடி – 2

சேத்துல கிடந்த நம்மையே தேவன்

தூக்கி எடுத்தார் கும்மியடி – 2

– இயேசுவை கண்டோம்

அன்ன ஆகாரம் தந்த மன்னனுக்கு

அடிச்சி கைதட்டி கும்மியடி – 2

முன்னனை மீதுற்ற சின்ன குமாரனை

கண்ணம் கடிச்சி நீ கும்மியடி – 2

– இயேசுவை கண்டோம்

விண்ணக தேவன் மண்ணகம் வந்ததை

மகிழ்ந்து புகழ்ந்து கும்மியடி – 2

விண்ணகம் வந்த உன்னத தேவனை

உயர்த்திப் பாடி கும்மியடி – 2

– இயேசுவை கண்டோம்