பாடல்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
Konalum Maarupaadumaana Ulakaththil
Fr. S. J. Berchmans
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்
முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
…. இராஜா
ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளி வீசுவோம்
…. இராஜா
இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர்
இருப்பதுபோல அவரைக் காண்போம்
…. இராஜா
அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
…. இராஜா
வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருயிகைலே
…. இராஜா