கிருபை மேல் கிருபை தாருமே
Kirupai Mael Kirupai Thaarumae
Lucas Sekar
கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே – உங்க (2)
உங்க பெலத்தின் மேலே பெலன் தாருமே
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2)
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – (2)
உமது வருகையின் நாள்
மிகவும் நெருங்குதய்யா
தேவனை சந்திக்கவே
ஆயத்தமாகணுமே (2)
இப்பொழுதும் எப்பொழுதும்
எந்நேரம் வந்திடலாம் (2)
ஆயத்தமுள்ள கன்னியை போல
எண்ணெயை நான் வைத்துக்கொள்ள (2)
(மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2)
– உங்க கிருபை
பெருங்காற்று வந்து என்மேல்
மோதியடிக்குதைய்யா
பெருவெள்ளம் வந்து என்மேல்
மோதியடிக்குதைய்யா (2)
ஆனாலும் விடவில்லை
கன்மலை மேல் நிற்கிறேன் (2)
புத்தியுள்ள வீட்டை நான்
கன்மலை மேல கட்டிடனும் (2)
(மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2)
– உங்க கிருபை
பரிசுத்த ஆவியினால்
நிரம்பி ஜெபிக்கணுமே
விசுவாசம் தளர்ந்திடாமல்
முன்னேறிச் செல்லணுமே (2)
அசைவில்லா ராஜ்ஜியத்தை
தருகின்ற தெய்வமல்லோ (2)
பயத்தோடு பக்தியோடும்
ஆராதனை செய்திடுவேன் (2)
(மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே) (2)
– உங்க கிருபை