நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே

Kirupaasanapathiyae Um Kirupaikal Thara Vaenumae

Moses Rajasekar

கிருபாசனபதியே உம்

கிருபைகள் தர வேணுமே

ஏழையின் புகலிடமே

பக்தர்களின் மறைவிடமே

உந்தனின் பாதம் பணிந்தால்

முட்கள் கூட பூவாகும்

சிங்கத்தின் கெபி கூட

இன்ப வீடாய் மாறிடும்

– கிருபாசனபதியே

வேதத்தை நாம் சுமந்தால்

சத்திய வேதம் நம்மை சுமக்கும்

பாதைக்கு வழி காட்டும்

சோதனையில் ஜெயம் கொடுக்கும்

– கிருபாசனபதியே

சந்தோஷ விண்ணொளியே

சாந்தத்தின் சொரூபியே

பொறுமைக்கு அதிபதியே – என்

அருமை இரட்சகரே

– கிருபாசனபதியே