கிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே
Kiristhavanai Tisdap Pannnnaathae
Moses Rajasekar
கிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே – அவனை
அசால்டாக எண்ணி விடாதே – 2
அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான் – 2
திட்டம் போட்டு மிரட்டிடலாம்
என்று எண்ணாதே – 2
கட்டி போட்டு மடக்கிடலாம்
என்று கனவு காணாதே – 2
முட்டி போட்டு ஜெபிச்சானன்னா – நீ
முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன் – 2
ஆழம் அகலம் தெரியாம காலை விடாதே – அவன்
நீளம் உயரம் தெரியாம மாட்டிக் கொள்ளாதே – 2
– அவன் வெட்ட வெட்ட
மாம்சத்தோடு இரத்தத்தோடு போரிடாதவன்
வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன் – 2
நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன் – 2
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
தண்ணீரை தரைபோல வழி நடப்பவன் – 2
அவன் வெட்ட வெட்ட
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன் – 2
உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும் – 2
பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும் – 2
அவன் வெட்ட வெட்ட