பாடல்
கவலை கொள்ளாதிருங்கள்
Kavalai Kollaathirungal
Fr. S. J. Berchmans
கவலை கொள்ளாதிருங்கள்
கவலை கொள்ளாதிருங்கள் (2)
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் – என்று
பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதில்லை, அறுப்பதில்லை
பரம பிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (மகளே) உன்னை
– உயிர்
கவலைப் படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட கூடுமா
புது பெலன் பெறவும் கூடுமா
– உயிர்
நாளைய தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
– உயிர்
தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது – நம்
தேவைகளை சந்திப்பார்
– உயிர்