பாடல்
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
Kattip Pitiththaen Unthan Paathaththai
Fr. S. J. Berchmans
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய்
வாழ வேண்டுமே
இரங்கும் ஐயா மனம்
இரங்குமையா
இரங்கும் ஐயா மனம்
இரங்குமையா
துப்பாக்கி ஏந்தும் கைகள் – உம்
வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
– இரங்கும்
பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்
– இரங்கும்
பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
– இரங்கும்