பாடல்
கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை
Kattina Veedu Pala Irunthum Kadavulukku Idamillai
Moses Rajasekar
கட்டின வீடு பல இருந்தும்
கடவுளுக்கு இடமில்லை – 2
மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு
முன்னனையில் உதித்தாரையா – இயேசு – 2
ஏழைகளைத் தேடிவந்த இயேசு
என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2
மச்சிவீடு பல இருந்தும்
மன்னவனுக்கு இடமில்லை – 2
தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு
மோட்ச ராஜன் உதித்தாரையா – 2
– ஏழைகளை
விலைமதியா வஸ்திரங்கள்
விதவிதமாய் குவிந்திருந்தும் – 2
கந்தலாடை அணிந்தாரையா இது
விந்தையான மகிமை ஐயா
– ஏழைகளை
பஞ்சனைகள் பல இருந்தும்
பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை – 2
நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின்
தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா – 2
– ஏழைகளை