நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல்

Karththarukku Kaaththirunthu Kaluku Pol

கர்த்தருக்கு காத்திருந்து

கழுகு போல் பெலனடைந்து

செட்டைகளை அடித்து

உயரே எழும்பிடுவாய்

புது பெலன் அடைந்திடுவாய் நீ

புது பெலன் அடைந்திடுவாய் நீ

புது பெலன் அடைந்திடுவாய் நீ

புது பெலன் அடைந்திடுவாய் நீ

தாகமுள்ளவன் மேல்

ஆவியை ஊற்றிடுவார்

வறண்ட நிலத்தின் மேல்

தண்ணீரை ஊற்றிடுவார்

– புது பெலன்

சாத்தானின் கோட்டைகளை

சத்தியத்தால் தகர்ப்பாய்

சிலுவையை சுமந்திடுவாய்

ஜெயக்கொடி ஏற்றிடுவாய்

– புது பெலன்

கர்த்தரில் பெலனடையும்

பாக்கியம் பெற்றிடுவாய்

பெலத்தின் மேல் பெலனடைந்து

சீயோனுக்கு வருவாய்

– புது பெலன்