நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது

Karththarin Saththam Vallamai Ullathu

கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது

கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது

திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்

தற்பரன் முழங்குகிறார் அல்லேலூயா

கேதுரு மரங்களையும்

லீபனோனின் மரங்களையும்

கர்த்தரின் வலிய சத்தம்

கோரமாக முறிக்கின்றது

சேனையதிபன் தமது முன்னிலை

ஜெய வீரனாக செல்கிறார்

– கர்த்தரின்

அக்கினி ஜூவாலைகளை

அவர் சத்தம் பிளக்கின்றது

காதேஸ் வனாந்திரத்தை

கர்த்தர் சத்தம் அதிரப் பண்ணும்

ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்

ராஜரீகமெங்கும் ஜொலிக்கும்

– கர்த்தரின்

பெண்மான்கள் ஈணும்படி

பலத்த கிரியை செய்திடும்

காட்டையும் வெளியாக்கும்

கர்த்தரின் வலிய சத்தம்

பெலன் கொடுத்து சமாதானமீந்த

பரன் எம்மை ஆசீர்வதிப்பார்

– கர்த்தரின்

பலவான்களின் புத்திரரே

பரிசுத்த அலங்காரமாய்

கனம், வல்லமை, மகிமை

கர்த்தருக்கே செலுத்திடுங்கள்

பிதா குமாரன் பரிசுத்தாவியின்

புது ஆசீர்வாதம் பெருசு

– கர்த்தரின்