நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

Karththarai Thuthiyungal Avar Entum Nallavar

Fr. S. J. Berchmans

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

அவர் பேரன்பு என்றுமுள்ளது

ஒருவராய் மாபெரும்

அதிசயங்கள் செய்தாரே

வானங்கள் ஞானமாய்,

உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றிப் புகழுவோம்

நாம் உயர்த்தி மகிழுவோம் (2)

பகலை ஆள்வதற்கு,

கதிரவனை உருவாக்கினார்

இரவை ஆள்வதற்கு,

சந்திரனை உருவாக்கினார்

… இன்று

செங்கடலை இரண்டாக,

பிரித்து நடக்கச்செய்தார்

பார்வோனையும் படைகளையும்

அதிலே மூழ்கடித்தார்

… இன்று

வனாந்திரப் பாதையில்,

ஜனங்களை நடத்திச் சென்றார்

எதிரியின் கையினின்று

விடுவித்துக் காத்துக்கொண்டார்

… இன்று

தாழ்மையில் இருந்து

நம்மையெல்லாம் நினைவு கூர்ந்தார்

உடல் கொண்ட அனைவருக்கும்

உணவு ஊட்டுகிறார்

… இன்று