நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

Karththar Periya Kaariyangal Seyvaar

Sirkali Yesuprakasam

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2

இன்றே செய்வார் நன்றே செய்வார்

அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர்

அல்லேலூயா பாடியே போற்றிடுவோம்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2

தானேயலைப் போல் ஜெபித்திடுவோம்

தாவீதைப் போல் துதித்திடுவோம்

சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார்

உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2

சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம்

சாமுவேலைப் போல் ஊழியமடைவோம்

நீதியின் பாதையில் நடத்திடுவார்

சாட்சியின் ஜீவியம் காத்திடுவார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2

யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம்

யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம்

கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார்

சீயோன் மலை மீது உயர்த்திடுவார்