பாடல்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
Karththar En Maeypparaay Irukkintar
Reegan Gomez
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
எனக்கொன்றும் குறைவில்லை – 2
புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை-2
அனுதினம் நடத்துவார்
அன்பின் தெய்வம் இயேசு ராஜா (2)
– கர்த்தர் என்
ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
ஆறுதல் அளிக்கின்றார்
நீதியின் பாதையில்
நித்தம் என்னை நடத்துவார்
– கர்த்தர் என்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கொஞ்சமும் பயமில்லை
தேற்றும் தெய்வம் என் துணையே
– கர்த்தர் என்