நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் என் மேன்மையும்

Karththar En Maenmaiyum

கர்த்தர் என் மேன்மையும்

மகிமையும் ஆனவர்

யாருக்கும் அஞ்சிடுவேன்

கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்

யாருக்கு அஞ்சிடுவேன் – நான் (2)

என் முகத்தை தேடு என்றீர்

இன்னமும் நான் அன்பு கூர்ந்து

நோக்குவேன் உம் பொன் முகமே

சிலுவை நோக்கி பார்த்த கண்கள்

சூழ்நிலைகள் மாறினாலும்

வெட்கமடைந்து போவதில்லையே

– கர்த்தர்

தகப்பனும் தாயும் என்னைக்

கைவிடும் வேளை வரினும்

அரவணைக்கும் உந்தன் கரமே

கழுகு தன் குஞ்சுகளைப்

பறந்து காப்பது போல காக்கும்

காத்த உந்தன் செட்டை தஞ்சமே

– கர்த்தர்

எந்தனுக்கு விரோதமான

எரிகோவின் மதில்களை

தகர்ந்து சாம்பலாக்கிடுவீர்

எதிரிகளின் சேனைகள்

என்றும் என்னைத் தொடராமல்

பின் தொடர்ந்து வந்திடுவீர்

– கர்த்தர்

காலமோ கடைசியாகி

பாவம் பாரில் படர்ந்து பெருகி

உலக வேஷம் கடந்து செல்லுதே

வருகை தாமதிக்கையில்

புறாவைப் போல சிறகிருந்தால்

பறந்து வந்து உம்மைக் காணுவேன்

– கர்த்தர்