பாடல்
கர்த்தாவே உம் பாதத்திலே
Karththaavae Um Paathaththilae
Reegan Gomez
கர்த்தாவே உம் பாதத்திலே
காலமெல்லாம் அமர்ந்திருப்பேன்
உம் பாதம் என் தஞ்சமே
உம் சமூகம் என் வாஞ்சையே
உன்னதமானவரே
உள்ளத்தில் வாழ்பவரே
மகிழ்வுடன் உம்மை துதிப்பேன்
– கர்த்தாவே
பெலனான கர்த்தாவே
உம்மைத்தானே நேசிக்கின்றேன்
ஆட்கொண்ட என் தெய்வமே
அன்பின் மணவாளனே
இதய ஏக்கம் நீரே
– கர்த்தாவே
அன்பரே உம் இன்ப சத்தம்
நித்தம் எந்தன் வாஞ்சையல்லோ
வழி காட்டும் தீபமே
பாதைக்கு வெளிச்சமே
அன்றாட என் உணவே
– கர்த்தாவே