பாடல்
கர்த்தாவே நீர் சொல்லும்
Karththaavae Neer Sollum
Pastor K. S. Wilson
கர்த்தாவே நீர் சொல்லும்
அடியேன் கேட்கிறேன்
பெலனற்ற எனக்கு பெலன் தாரும்
ஞானமற்ற எனக்கு ஞானம் தாரும்
என் பெலனோ கொஞ்சமே உங்க பெலத்தை தாருமே
என் ஞானமோ கொஞ்சமே உங்க ஞானத்தை தாருமே
உலகத்தில் எழும்பி ஜொலிக்க
உங்க சுவிசேஷம் தாருமே
உங்க ஆசீர்வாதத்தை நீர் எனக்கு தாருமே – (2)
உமக்காய் அனுதினம் செயல்பட
ஏசுவின் பிள்ளையாய் மாறிட
உங்க கிருபை தாருமே உங்க கிருபை போதுமே – (2)