நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி

Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi

Moses Rajasekar

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி

அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி – 2

அவர் ஆதியும் அந்தமானவர்

இப்ராகிமால் போற்றப்பட்டவர்

அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம

ஆபிரகாமால் போற்றப்பட்டவர்

– கனத்திற்கும்

இஸ்ரவேல் ஈசாக்கின் தேவன் – அவர்

ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் – 2

அன்பு உள்ளம் கொண்டவர்

நல்ல உள்ளம் படைத்தவர் – 2

உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி

உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி

– அவர் ஆதியும்

பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம்

பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் – 2

சாத்தானை ஜெயித்தவர்

சாபத்தை வென்றவர் – 2

அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி

அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி

– அவர் ஆதியும்

சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி

நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி – 2

வானாகி மண்ணாகி

வழியாகி ஒளியாகி – 2

ஊனாகி உயிரான தேவன் நம்

கோனாகி ஆள வந்த ராஜன்

– அவர் ஆதியும்