நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கனப்பொழுதும் என்னை கைவிடாத உம்மை

Kanappoluthum Ennai Kaividaatha Ummai

Moses Rajasekar

கனப்பொழுதும் என்னை

கைவிடாத உம்மை

கர்த்தாவே என்று துதிப்பேன்

இமை பொழுதும் என்னை மறவாத உந்தன்

பாதம் பணிந்திடுவேன்

ஆ! என் நேசரே வாரும் என்னிலே

நேசர் பாதமே எந்தன் தஞ்சமே

உறவுகள் கூட பிரிந்திடலாம்

உண்மைகள் கூட மறைந்திடலாம்

மறவாத நேசர் இயேசு உண்டு

மறவாமல் உன்னை நடத்திடுவார்

மறவாமல் உன்னை நடத்திடுவார்– 2

– ஆ! என் நேசரே

அழிந்திடும் மனிதன் அழிந்திடும் பாசம்

தேவை முடிந்தவுடன் அழிந்திடுதே – 2

உம் அன்புக்காய் ஏங்கி நின்றேன்

உம்மிடம் கண்டபின் எங்கே போவேன்

உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் – 2

– ஆ! என் நேசரே

ஆத்துமாவே நீ கலங்குவதேன்

உன் நம்பிக்கை நங்கூரம் இயேசுவன்றோ

உள்ளங்கையில் வரைந்திட்டவர்

உண்மையாய் உன்னை நடத்திடுவார்

உண்மையாய் உன்னை நடத்திடுவார் – 2

– ஆ! என் நேசரே