நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கல்வாரி மலையிலே என் கர்த்தா உம் வேதனை

Kalvaari Malaiyilae En Karththaa Um Vaethanai

Sirkali Yesuprakasam

கல்வாரி மலையிலே என்

கர்த்தா உம் வேதனை

கண்ணீர் பெருகிடுதே கல்

நெஞ்சமும் உருகிடுதே

முப்பது வெள்ளியின் மோகமும் யூதாஸ்

முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ

வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்

வலியவர்க்கே உம்மை காட்டித்தந்தான்

இரக்கமில்லாதவர் தேடி வந்தார்

இதயம் இல்லாதவர் பிடித்துச்சென்றார்

– கல்வாரி

இரத்தம் நதி போல் பாயுதய்யா

என் இதயம் தனலாய் வேகுதய்யா

உத்தமர் உடலும் துடிக்குதய்யா அங்கு

உளுத்தவர் உள்ளமும் களிக்குதய்யா

எத்தர்கள் நெஞ்சினில் இரக்கமில்லை அதை

நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை

– கல்வாரி

ஆணி உம் மேனியில் பாயலாமோ உம்

அங்கமெல்லாம் காயம் ஆகலாமோ

தாகத்தால் நீரும் தவிக்கலாமோ குடிக்க

காடியை கொடியவன் கொடுக்கலாமோ

சிலுவையில் நீர் பட்ட பாடுகளை இன்றும்

சிந்தித்தால் என் உள்ளம் துடிக்குதய்யா

– கல்வாரி