நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கல்வாரி காட்சி சிந்திக்குமா உன் மனசாட்சி

Kalvaari Kaatchi Sinthikkumaa Un Manasaatchi

Sirkali Yesuprakasam

கல்வாரி காட்சி சிந்திக்குமா

உன் மனசாட்சி கனிவுள்ள

இயேசு சிலுவையை தூக்கி

கல்வாரி நோக்கி தவழ்கின்ற காட்சி

கரடு முரடான கபால ஸ்தலம் நோக்கி

முகமே நீர் வாடி கெத்சமனே

வேண்டுகையில் முக வேர்வை

இரத்தமாக மாகி

விரோதிகளும் தனை சூழ ஏரோதின்

கைதியாகி காவலர்கள் பிடித்திழுக்க

சிலுவையில் அறையும் என்று

யூதர்கள் முறையிட

சேவகர்கள் ஓங்கி அறைய

சிலுவை ஒன்றே தன் தோளில் ஏந்தி

தள்ளாடி தள்ளாடி தவிக்கின்ற காட்சி

– கல்வாரி

நலிந்தோர்க்கும் மீட்சி நல்கிய

கரங்கள் இரண்டும்

ஆணியால் கடாவும் காட்சி

ஒருபாவம் அறியாத பரிசுத்த

தேவனுக்கு முள்கிரீடம் சூடும் சூழ்ச்சி

சிலுவையில் தொங்கிட்ட

ஆவி பிரியும் முன்

தேன் போல திருவார்த்தை

மொழிகின்ற நற்சாட்சி

– கல்வாரி