பாடல்
கலங்காதே நீ கலங்காதே
Kalangaathae Nee Kalangaathae
Pastor K. S. Wilson
கலங்காதே நீ கலங்காதே
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்
கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
கவலைகள் யாவையும் நீக்கிடுவார்
– கலங்காதே
அற்புதம் உனக்கு செய்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்
– கலங்காதே
மனிதரின் அன்பு மாறிடும்
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்
– கலங்காதே
ஒரு போதும் மறவாத ஏசு உண்டு
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை
– கலங்காதே
சிலுவையின் நிழலில் ஆறுதலே
சிலுவையின் நிழலில் அடைக்கலமே
– கலங்காதே
சாத்தானை ஜெயித்தவர் உனக்கு உண்டு
வெற்றியை உனக்கு தந்திடுவார்
– கலங்காதே
யெகோவாயீரே பார்த்துக் கொள்வார்
யெகோவா நிசியே வெற்றி தருவார்
– கலங்காதே