பாடல்
கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார்
Kalangaathae Karththar Unnai Kaappaar
Sirkali Yesuprakasam
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார்
திகையாதே திகையாதே தேவன் உன்னோடிருக்கின்றார்
நீ அவர் அடியவரே அவர் உந்தன் அடைக்கலமே
நீ இயேசு அடியவனே இயேசு உந்தன் அடைக்கலமே
– கலங்காதே
காற்றும் கடலும் வானும் பூவியும்
ஓர் நாள் ஒழிந்துவிடும்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவின் வார்த்தை ஒழியாது
காக்கும் இயேசுவின் கருணை கரங்கள்
உன்னை விட்டு விலகாது
– கலங்காதே
ஏழ்மை பகைமை துன்பம் துயரம்
எது உன்னை நெருங்கினாலும்
ஏற்ற வேளையின் உதவிடும் இயேசு
என்றும் உன்னோடு இருக்கிறார்
கேட்கும் வரங்களை கொடுத்திடும் கர்த்தர்
கிருபையாய் காத்திடுவார்
– கலங்காதே