பாடல்
கைதூக்கி எடுத்தீரே
Kaithookki Eduththeerae
Fr. S. J. Berchmans
கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
– கைதூக்கி
என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
– கைதூக்கி
மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகிழ்சியால் உடுத்தினீரே
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
– கைதூக்கி