நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கேரீத் ஆற்றங்கரையில்

Kaereeth Aattangaraiyil

Moses Rajasekar

கேரீத் ஆற்றங்கரையில்

நீரூற்று வற்றிப் போனாலும் – 2

மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்

உன்னையும் கண்டிடுவார்

எலியா ஒ எலியா தேவன்

உன் வாழ்வில் ஒளியா – 2

– கேரீத்

தீர்க்கனின் பசி தீர்க்க

காகம் விரைந்தது அன்றோ - அன்று

உந்தனின் தாகம் தீர்க்க

தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா

சமாரியா கிண்றறனடையில்

அந்த ஸ்திரீயை கண்ட தேவன்

உன்னையும் கண்டிடுவார்

உன் தாகம் தீர்த்திடுவார்

சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்

வாழ்வில் நல்ல சமாரியன்

கடலில் வலை வீசி

வெறுமையாய் நிற்கின்றாயே

இயேசு வருகின்றார்

என் படகை நிரப்பிடுவார்

பேதுரு ஓ பேதுரு

இயேசு உன் வாழ்வில் கேதுரு