காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகின்ற இவர் யார்
Kaattukkum Kadalukkum Kattalaiyidukinta Ivar Yaar
Moses Rajasekar
காற்றுக்கும் கடலுக்கும்
கட்டளையிடுகின்ற இவர் யார் – 3
கடலின் மேலே நடந்து
வருகின்ற இவர் யார் – 3
மலைகளின் மேலே குதித்து
வருகின்ற இவர் யார் – 3
புள்ளி மானைப் போலே
துள்ளி வருகின்ற இவர் யார்
அவர் தான் இயேசு அவரிடம் பேசு
அவர் தான் இயேசு அவரிடம் பேசு – 2
அவர் நாமம் சொன்னால்
நோகளும் ஓடுதே இவர் யார் – 2
அவர் பேரைச் சொன்னால்
பேய்களும் நடுங்குதே இவர் யார்
அவர் இரத்தம் சொன்னால்
சத்துரு நடுங்குவான் இவர் யார்
அவர் உத்திரவிட தேவ சித்தம்
நடக்குதே இவர் யார்
– அவர் தான் இயேசு
அவர் பேசத் தொடங்கினால்
நேசம் வடியுதே இவர் யார் – 2
என் நேச மணாளன்
பாச குணாளன் இவர் யார்
வ னாந்தர பாதையில்
நேசகுமாரன் இவர் யார்
என் இதய சித்திரம்
முத்திரை மோதிரம் இவர் யார்
– அவர் தான் இயேசு
என் அரணும் கோட்டையும்
பெலனும் துருகமே இவர் யார் – 2
என் உறவே உண்மை
தெய்வமே இவர் யார்
மரித்து உயிர்த்து மரணத்தை
ஜெயித்த இவர் யார்
என்னை மறுரூபமாக்கி
மகிமையில் சேர்க்கும் இவர் யார்
– அவர் தான் இயேசு