நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காரியம் மாறுதலாய் முடியும்

Kaariyam Maaruthalaay Mutiyum

Wesley Maxwell

காரியம் மாறுதலாய் முடியும்

நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்

நம் தேசத்தின் சிறையிருப்பை

மாற்றிடும் காலம் இதுவே

எழுந்துவா ஜெபித்திட

எழுந்துவா துதித்திட

நாம் ஜெபித்திட நாம் துதித்திட

சிறையிருப்பு மாறிடும்

– எழுந்துவா

துதித்திட கதவுகள் திறக்கும்

தூத சேனை வந்திறங்கும்

கட்டுகள் யாவும் அறுந்திடும்

கதவுகளெல்லாம் திறந்திடும்

– எழுந்துவா

ஜெபித்திட அக்கினி இறங்கும்

கர்த்தரின் வல்லமை விளங்கும்

பாகலின் ஆவிகள் அழியும்

தேசம் தேவனை அறியும்

– எழுந்துவா

சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்

சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்

தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட

தேவ சபைகள் பெருகிடும்

– எழுந்துவா