நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

காப்பார் உன்னைக் காப்பார்

Kaappaar Unnaik Kaappaar

Joel Thomasraj

காப்பார் உன்னைக் காப்பார்

காத்தவர் காப்பார் இன்னும்

இனிமேலும் காத்திடுவார்

கலங்காதே மனமே காத்திடுவார்

கண்டுன்னை அழைத்தவர் கரமதை

பார் அவர் கைவிடாதிருப்பார்

ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த

ஆசிகளை எண்ணிப்பார்

எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்

என்றும் அதை எண்ணிப்பார் (2)

– -- காப்பார்

இஸ்ரவேலுக்கு வாக்குப்படி

இன்பக் கானான் அளிக்கவில்லையோ

இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று

பின்னும் இரங்கவில்லையோ

இல்லையோ , இல்லையோ , இல்லையோ

மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

– -- காப்பார்

வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்

இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்

சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்

கிட்டியிழுப்பவரும்

ஜெயமும், கனமும், சுகமும்

இரக்கமா யுனக்களிப்பவரும்

– -- காப்பார்