பாடல்
கால்கள் தள்ளாட விடமாட்டார்
Kaalkal Thallaada Vidamaattar
Reegan Gomez
கால்கள் தள்ளாட விடமாட்டார்
கன்மலையின் மேல் நிறுத்திடுவார்
துதித்திடுவேன் போற்றிடுவேன்
தூயவரை உயர்த்திடுவேன்
தண்ணீர்களை கடந்தாலும்
மூழ்கிப்போவதில்லை
தாங்கிடுவார் ஏந்திடுவார்
தோளில் சுமந்திடுவார்
– கால்கள்
அனுதினமும் நிரப்பிடுவார்
ஆனந்த தைலத்தினால்
அல்லேலூயா பாடிடுவேன்
அன்பர் இயேசுவுக்கே
– கால்கள்
பெலப்படுத்தும் இயேசுவினால்
எல்லாமே செய்திடுவேன்
சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்
மதிலை தாண்டிடுவேன்
– கால்கள்