பாடல்
காலங்கள் மாறிடலாம்
Kaalangal Maaridalaam
Reegan Gomez
காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
படைத்தவர் உன்னை காத்திடுவார்
சோதனைகள் வந்தாலும்
சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும்
தளர்ந்து போகாதே
பெலன் தரும் தேவன் இருக்கிறார்
கிருபையால் உன்னை நிரப்பிடுவார்
– காலங்கள்
மலை போன்ற தடைகளும்
உன் முன்னே வந்தாலும்
கண்ணீரின் பாதையில்
நீ நடக்க நேர்ந்தாலும்
தடைகளைத் தகர்த்திடும் கர்த்தர்
கன்மலை மேல் உன்னை நிறுத்திடுவார்
– காலங்கள்