பாடல்
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
Kaalamo Selluthae Vaalipam Maraiyuthae
காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில் – அந்த
நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
கருணையில் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
– மகிமையில்
துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னலெல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால்
– மகிமையில்
வாழ்க்கையை இயேசுவால்
நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க
காத்துக்கொள் விசுவாசத்தை
– மகிமையில்
உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமேன்
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம்
– மகிமையில்