நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

Jothi Thontum Or Thaesamunndu

ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

விசுவாசக் கண்ணால் காண்கிறோம்

நம் பிதா அழைக்கும் பொழுது

நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே – மோட்சக்

கரையில் நாம் சந்திப்போம்

இன்பராய் ஈற்றிலே – மோட்சக்

கரையில் நாம் சந்திப்போம்((2)

– இன்பராய்

அந்த வான் கரையில் நின்று நாம்

விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்

துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து

சுத்தரின் ஆறுதல் அடைவோம்

– இன்பராய்

நம் பிதாவின் அன்பை நினைத்து

அவரில் மகிழ்ந்து பூரிப்போம்

மீட்பின் நன்மைகளை உணர்ந்து

அவரை வணங்கி துதிப்போம்

– இன்பராய்

அந்த மோட்ச கரை அடைந்து

வான சேனையுடன் களிப்போம்

நம் தொல்லை யாத்திரை முடித்து

விண் கிரீடத்தை நாம் தரிப்போம்

– இன்பராய்

சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்

சந்திப்போம், பாடுவோம், ஆளுவோம்

துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்

நலமாய் நாம் இளைப்பாறுவோம்

– இன்பராய்

அங்கே நம் இரட்சகர் என்றென்றும்

ஆளுகை செய்து வீற்றிருப்பார்

துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்

தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்

– இன்பராய்

என் உற்றார் போய் விட்டார் முன் அங்கே

ஆயின் நான் மீளவும் சந்திப்பேன்

அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே

ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன்

– இன்பராய்

ஏழைக்கும் மாளிகை இங்குண்டு

என்று நல் மீட்பர் அழைக்கிறார்

மாந்தர் யாவர்க்கும் இடமுண்டு

எல்லோரும் வாருங்கள் என்கிறார்

– இன்பராய்