பாடல்
ஜெபத்தின் நாயகனே எங்கள்
Jepaththin Naayakanae Engal
Moses Rajasekar
ஜெபத்தின் நாயகனே எங்கள்
தவத்திரு திருமகனே
அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2
வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2 –
ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
நிரப்பி மகிழணுமே
அந்நிய பாஷை பரலோக பாஷை – 2
பாடி மகிழணுமே நாங்கள் – 2
– ஜெபத்திந் நாயகனே
பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள்
துதித்து மகிழணுமே
பரலோக அக்கினி பலி பீடத்திலே – 2
பரவசம் ஆகணுமே – 2 – எங்கள் மீது
– ஜெபத்திந் நாயகனே
ஆராதனை அபிஷேகம் எங்கள்
சபையில் இறங்கணுமே
ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2 நீர்
பதில் தந்து மகிழணுமே – எங்களுக்கு – 2
– ஜெபத்திந் நாயகனே