நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜெப அறைக்குள் என்னை

Jepa Araikkul Ennai

Chandrasekaran

ஜெப அறைக்குள் என்னை

அழைத்துக் கொண்டு செல்லுங்க

எஜமானனே மணவாளனே

உங்க இன்பத்தாலே

என்னை சொந்தமாக்குங்க என்

இராஜனே இயேசு இராஜனே

நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க

ஜெப ஆவியாலே இப்போ நிரப்புங்க

நீர் எந்தன் வாழ்க்கையில்

செய்திட நினைத்தது

ஒரு நாளும் தடைபடாது

– நிரப்பிடுங்க

நித்தமும் கிருபையால்

நிறைந்து நான் ஜெபிக்க

எந்நாளும் அணைத்துக்கொள்ளும்

– நிரப்பிடுங்க

பிதாவின் வீட்டிலே

எனக்கொரு ஸ்தானத்தை

என்னாளும் ஆயத்தம் செய்வீர்

– நிரப்பிடுங்க