நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

Jeevanulla Thaevan Thangum Paraloka Erusalaem

Fr. S. J. Berchmans

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

பரலோகம் (நம்) தாயகம்

விண்ணகம் (நம்) தகப்பன் வீடு

கோடான கோடி தூதர்

கூடி அங்கே துதிக்கின்றனர்

பரிசுத்தரே என்று பாடி

(பாடிப்பாடி) மகிழ்கின்றார்

பரிசுத்தர் பரிசுத்தர்

பரலோக தேவன் பரிசுத்தர் – நம்

– ஜீவனுள்ள

பெயர்கள் எழுதப்பட்ட

தலைப்பேறானவர்கள்

திருவிழாக் கூட்டமாகக்

கொண்டாடி மகிழ்கின்றனர்

அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா ஓசன்னா

கொண்டாட்டம் கொண்டாட்டம்

நம் தகப்பன் வீட்டில்

– ஜீவனுள்ள

பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்

ஆவி அங்கே

எல்லாரையும் நியாயம் தீர்க்கும்

நியாயாதிபதி அங்கே

நீதிபதி கர்த்தரே

நீதிபதி கர்த்தரே

எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி – அவர்

– ஜீவனுள்ள

புதிய உடன்பாட்டின்

இணைப்பாளர் இயேசு அங்கே

நன்மை தரும் ஆசீர்வாதம்

பேசும் இரத்தம் அங்கே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

– ஜீவனுள்ள