நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜாதிகளே எல்லாரும்

Jaathikalae Ellaarum

Wesley Maxwell

ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை

கெம்பீரமாகப் பாடுங்கள்

ஜனங்களே எல்லாரும் இயேசுவை

போற்றி புகழ்ந்து பாடுங்கள்

அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது

கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது

கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்

அவரே எனக்கு இரட்சிப்புமானவர்

– அவர் நம் மேல்

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது

என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்

– அவர் நம் மேல்

நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்

விசாலத்திலே என்னை அவர் வைத்தார்

– அவர் நம் மேல்