நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இதுவரை செய்த செயல்களுக்காக

Ithuvarai Seytha Seyalkalukkaaka

இதுவரை செய்த செயல்களுக்காக

இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்

இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்

உவர் நிலமாக இருந்த என்னை

விளைநிலமாக மாற்றிய உண்மை

அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்

நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி(2)

– இதுவரை செய்த

தனி மரமாக இருந்த என்னை

கனிமரமாக மாற்றிய உம்மை - திசைகளும்

கோள்களும் அசைகின்ற வரையில்

இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி

இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி

– இதுவரை செய்த

உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே

சொந்தமாய் என்னை ஏற்றுக் கொள்வீரே

சோர்விலும் தாழ்விலும் சோதனையாவிலும்

தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி.

– இதுவரை செய்த