நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இதுவே காலம் இதுவே காலம்

Ithuvae Kaalam Ithuvae Kaalam

இதுவே காலம் இதுவே காலம்

இயேசுவை சொல்ல, எதிரியை வெல்ல

எழும்பி நாம் சொல்லும் காலம்

கதறி ஜெபித்து களத்தில் இறங்கும் காலம்

கனிகள் கொடுத்து கர்த்தரை ஜெபிக்கும் காலம்

– இதுவே காலம்

பாவத்தின் சோதனை நெருங்கிடும் போது

பரிசுத்தர் பாதம் விழுவோம்

பரமனை உயர்த்தி ஓசிப்பு கூற

பார்க்கின்றார் என்று சொல்லுவோம்

தேவன் பார்க்கின்றார் என்று சொல்லுவோம்

– இதுவே காலம்

பாதாளம் விழுங்கும் பாரதத்தை மீட்கும்

பலமுள்ள தேவன் சேனை நாம்

பட்டயமாம் வசனம் கரங்களில் ஏந்தி

பகைவனை வென்றிடுவோம் (2)

– இதுவே காலம்

காலமோ கொஞ்சம் வேலையோ அதிகம்

கடினமாக உழைப்போம்

கண்ணீர் துடைத்து பலனை கொடுத்து

கால் வைக்கும் தேசம் தருவார் (இயேசு) (2)

– இதுவே காலம்