பாடல்
இது கர்த்தராலே வந்த காரியம்
Ithu Karththaraalae Vantha Kaariyam
Chandrasekaran
இது கர்த்தராலே வந்த காரியம்
நாமெல்லாம் ஒன்றாக களி கூருவோம்
ரெபேக்காளை ஈசாக்கோடு
இணைத்திட்ட தேவன்
இவர்களையும் இணைத்தார்
நாம் களிகூறுவோம்
களிகூறுவோம் – 2 இது
கர்த்தராலே வந்த காரியம்
நாம் வாழ்த்திடுவோம்
வாழ்த்திடுவோம்
கர்த்தராலே வந்த காரியம்
சகோதரியே மணவாட்டியே நீ
கோடா கோடியாய்
பெருகிட வாழ்த்துகிறோம்
சகோதரனே மணவாளனே நீ
கோடா கோடியாய்
பெருகிடவே வாழ்த்துகிறோம்
– நாம் களிகூறுவோம்
உன் பிள்ளைகள் பகைவர்களின்
வாசஸ்தலங்களை என்றும்
சுதந்தரிப்பார்
உன் சந்ததி பகைவர்களின்
வாசதலங்களை என்றும் சுதந்தரிப்பார்
– நாம் களிகூறுவோம்
வானத்திலும் பூமியிலும்
உண்டாகும் நன்மைகள்
என்றும் உனக்கு சொந்தம்
வல்லவரின் வார்த்தைகளோ
வாழ்நாட்கள் எல்லாம்
உன்னை வழிநடத்தும்
– நாம் களிகூறுவோம்