பாடல்
இதயமே இதயமே
Ithayamae Ithayamae
Chandrasekaran
இதயமே இதயமே உன்
தேவனைப் பாடிடு
கவலைகள் மறந்து
கஷ்டங்கள் மறந்து
என்னாலும் பாடிடு-2
கலங்காதே திகையாதே
உன் தேவன் தாங்கிடுவார்
நீதியின் கரத்தினால் உன்னை
வழுவாமல் காத்திடுவார்
– இதயமே
உனக்காக சிலுவையில்
தன் ஜீவனை கொடுத்தாரே
உனக்காக உயிர்த்தாரே
உன்னோடு ஜீவித்திட
– இதயமே
உனக்கு முன் எரிச்சலாய்
நிற்கும் யாவரும் வெட்கமடைவார்
உனக்கு முன் வழக்காடுவோர்
ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்
– இதயமே