பாடல்
இருள் சூழும் வேளையிலே நான்
Irul Soolum Vaelaiyilae Naan
Chandrasekaran
இருள் சூழும் வேளையிலே நான்
தடுமாறி வாழ்கிறேன்
என் இதயத்தின் பாரமெல்லாம்
உந்தன் பாதத்தில் இறக்கி
வைத்தேன்.
என் தேவா என்னைத்தாங்கும்
உந்தன் கிருபை வேண்டுமையா-2
என் தேவனே என் தேவனே – 2
ஏன் என்னை கைவிட்டீரே
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் தூரம்போனீர்
– என் தேவா
நானோர் புழு மனுஷனல்ல
மனுஷரால் நிந்தையானேன்
ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு
நாள்தோறும் வாடுகிறேன்
– என் தேவா
சிங்கத்தை போல் என்னை சுற்றிலும்
சத்துருக்கள் வருகின்றன
தண்ணீரைப்போல் என்னுள்ளம்
கரைந்து என் எலும்புகள்
அசைகின்றதே
– என் தேவா