நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இருள் சூழும் காலம் இனி வருதே

Irul Soolum Kaalam Ini Varuthae

இருள் சூழும் காலம் இனி வருதே

அருள் உள்ள நாட்கள் பயப்படுத்தும்

திறவுண்ட வாசல் அடைப்படும் முன்

நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய்

முன் செல்வோர் யார்

நாட்கள் கொடியதாய் மாறிடுதே

காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

தரிசு நிலங்கள் அநேகம் உண்டு

தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்

பரிசாக இயேசுவை அவர்களுக்கும்

அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

– திறவுண்ட

எத்தனை நாடுகள் இந்நாட்களில்

கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்

திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்

பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்

– திறவுண்ட

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு

ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

– திறவுண்ட

இனி வரும் நாட்களில் நமது கடன்

வெகு அதிகம் விசிவாசிகளே

நம்மிடம் உள்ள ஐக்கியமே

வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே

– திறவுண்ட

இயேசுவே எங்கள் உள்ளங்களை

அன்பென்னும் ஆவியால் நிறைத்திடுமே

இந்தியாவின் எல்லா தெருக்களிலும்

இயேசுவின் நாமம் விரைந்திடுமே

– திறவுண்ட