நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இருக்கிறார் இருக்கிறார் இயேசு

Irukkiraar Irukkiraar Yesu

Sirkali Yesuprakasam

இருக்கிறார் இருக்கிறார் இயேசு

இயேசு இருக்கிறவராக இருக்கிறார்

இங்கேயும் இருக்கிறார்

எங்கேயும் இருக்கிறார்

இப்போதும் இருக்கிறார்

எப்போதும் இருக்கிறார்

இருவர் மூவர் இயேசுவின் பெயரால்

கூடுமிடத்தில் அவர் இருக்கிறார்

அவரை உயர்த்தும் எந்த ஸ்தானத்திலும்

இரங்கி ஆசீர்வதிக்கிறார்

– இருக்கிறார்

பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி

பரிசுத்த வாழ்வை அளிக்கிறார்

பேயினை விரட்டி நோயினை அகற்றி

பேரின்ப வாழ்வை தருகிறார்

– இருக்கிறார்

குறைகளை போக்கி நிறைவை உண்டாக்கி

குதுகுல வாழ்வை அளிக்கிறார்

வறுமையை நீக்கி வளமை சேர்த்து

வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார்

– இருக்கிறார்