நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இரைச்சலின் சத்தம் கேட்கணும்

Iraichchalin Saththam Kaetkanum

Lucas Sekar

இரைச்சலின் சத்தம் கேட்கணும்

இந்தியா தேசம் முழுவதும்

பின்மாரி மழையும் பொழியணும்

பாரத தேசம் முழுவதும்

சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே

மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே (2)

கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே

நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே (2)

– இரைச்சலின் சத்தம்

காலம் இனி செல்லாது

ஒளியுள்ள காலம் முடிகிறதே (2)

கண்ணீரோடு ஜெபித்திடுவோம்

எழுப்புதலைக் கண்டிடுவோம் (2)

– கிருபையின் வாசல்…

இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே

தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே (2)

அழுகையோடும் புலம்பலோடும்

பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம் (2)

– கிருபையின் வாசல்…

பரிசுத்தரின் சித்தம் ஒன்றே

சபைகளில் பூரணமாய் நடக்கணுமே (2)

பரிசுத்தவான்கள் ஒருமனமாய்

தேவ இராஜ்ஜியத்தை எழுப்பணுமே (2)

கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்

திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம் (2)

– கிருபையின் வாசல்…