நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இராக்கால நேரம் ராஜா உம் பாதம்

Iraakkaala Naeram Raajaa Um Paatham

Reegan Gomez

இராக்கால நேரம் ராஜா உம் பாதம்

அமர்ந்து ஜெபிக்கின்றேன்

கண்ணீருக்கு பதில் தாருமென்று

ஏங்கி கதறுகின்றேன்

என் ஜனம் அழிவதை எப்படி நான் காண்பேன்

இரங்கும் என் இயேசய்யா

தாழ்த்துகிறேன் என்னை தரைமட்டுமாய்

திறப்பிலே நின்றிடுவேன்

– இராக்கால

நதியளவு தினம் கண்ணீர் சிந்திட

நாதா உம் பாரம் தாரும்

உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே

அப்பா உம் ஏக்கத்தினால்

– இராக்கால

அணையாத ஜெப வாஞ்சை என்னில் தாரும்

ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும்

என் ஜனங்கள் உம்மைக் காணும் வரை

ஓய்வின்றி கதறச் செய்யும்

– இராக்கால