நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இராஜா உம்மைப் பார்க்கணும்

Iraajaa Ummaip Paarkkanum

Fr. S. J. Berchmans

இராஜா உம்மைப் பார்க்கணும்

இராப்பகலாய் துதிக்கணும்

வருகைக்காய் காத்திருக்கின்றேன்

எப்போது வருவீர் ஐயா

இறுதிக்காலம் இதுவே என

அறிந்து கொண்டேன் நிச்சயமாய்

உறக்கத்தில் இருந்து நான்

உமைக்காண விழித்துக் கொண்டேன்

வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே

வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்

மணமகனை வரவேற்கும்,

மதி உடைய கன்னிகை போல

விளக்கோடு ஆயில் ஏந்தி,

உமக்காக வெளிச்சமானேன்

– வரவேண்டும்

உண்மையுள்ள ஊழியனாய்,

நீர் கொடுத்த தாலந்தை

பயன்படுத்தி பெருக்கிடுவேன்

மகிழ்ச்சியில் பங்கடைவேன்

– வரவேண்டும்

தாராளமாய்க் கொடுத்திடுவேன்

தாங்கிடுவேன் ஊழியங்கள்

அனாதை ஆதரவற்றோர்

கண்ணீரை துடைத்திடுவேன்

– வரவேண்டும்

ஊழியத்தில் உதவிடுவேன்

புத்தி சொல்வேன் போதிப்பேன்

இறைவாக்கு உரைத்திடுவேன்

எப்போதும் துதித்திடுவேன்

– வரவேண்டும்

அந்தகார கிரியைகளை,

அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்

இச்சைக்கு இடங்கொடாமல்

இயேசுவையே தரித்துக் கொண்டேன்

– வரவேண்டும்

குடிவெறி களியாட்டம்

வேசித்தனம் விட்டுவிட்டேன்

சண்டைகள், குறை சொல்லுதல்

அடியோடு வெறுத்துவிட்டேன்

– வரவேண்டும்

வீண்பெருமை தேடாமல்

பொறாமை கொள்ளாமல்

இழிவான உணர்வுகளை,

சிலுவையிலே அறைந்துவிட்டேன்

– வரவேண்டும்