பாடல்
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை
Intu Kannda Ekipthiyanai Kaannpathillai
Moses Rajasekar
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை
இன்று கண்ட துன்பம் இனி வருவதில்லை – 2
வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது – 2
உன் பாதம் கல்லில் இடறாது – 2 – இன்று
செங்கடல் பிளந்து வழிகொடுக்கும்
யோர்தான் இரண்டாக பிரிந்துவிடும்
எரிகோ தூளாக இடிந்து விழும்
கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய்
இன்று கண்ட – 2
நோய்கள் உன்னை நெருங்குவதில்லை
பேய்கள் உன்னை அணுகுவதில்லை
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை
இஸ்ரவேலுக்கெதிரான குறியுமில்லை
– இன்று கண்ட – 2
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
சேனைகளின் தேவன் உன்னோடு இருக்கும்போது
மனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது
– இன்று கண்ட