நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட

Intha Naal Varai Ennaik Kaaththitta

Thomas Prithvi

இந்த நாள் வரை என்னைக்

காத்திட்ட எந்தன் கன்மலை நீரே

இப்போதும் எப்போதும் என்னை

சுமக்கும் தகப்பன் நீரே

உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா

உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா

நீர் நல்லவர் அல்லேலூயா நீர்

மிகவும் நல்லவர்

உண்மையில்லா திருந்தேன்

என்னைத் தூக்கி சுமந்தீரே

பாவங்களை மன்னித்து

மகிழ்ச்சியாய் மறந்தீரே

– உம்மைத்

ஒன்றுமில்லா திருந்தேன்

நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்

தேவைகளை சந்தித்து

மீதம் எடுக்க வைத்தீர்

– உம்மைத்

வியாதியாய் இருந்தேன்

குணமானேன் தழும்புகளால்

வார்த்தையை அனுப்பி என்னை

வாழவைத்தீரே

– உம்மைத்