நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்

Intha Naal Karththar Unndu Pannnninaar

Wesley Maxwell

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்

நாம் மகிழ்ந்து களிகூறுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்

இப்புதிய நாளை காண செய்தார்

புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்

புதிய பாடலை நம் நாவில் தந்தார்

– அல்லேலூயா

நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்

எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்

நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்

தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்

– அல்லேலூயா

நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்

நன்மையான வாயை திருப்தியாக்கினார்

கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்

– அல்லேலூயா