இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்
Intha Kallinmael En Sapaiyai Kattuvaen
Unknown
இந்த கல்லின்மேல்
என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை
மேற்கொள்ளாதே
சபையின் தலைவர்
இயேசுவே
மூலைக்கு தலைக்கல்
இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா அல்லேலூயா
பாதாளம் தோற்க்குமே
இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே
சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே
சபைதனில் நிலை நாட்டினீர் புது
மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர் என்னை
கிருபையால் உயர்த்தினீர்
– இந்த கல்லின்மேல்
ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே
குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே - 2
ஆவியில் நல்ல தகப்பனே சபை
முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே நாங்கள்
கிறிஸ்துவின் சரீரமே
– இந்த கல்லின்மேல்
பார்வோனின் வல்லமைகள் முறியச்செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழியச்செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி எங்கள்
ஜெபத்திலே பற்றி எரியுமே
தடைகளை அது தகர்க்குமே
சபைதான் வெல்லுமே என்றும்
சபைதான் வெல்லுமே
– இந்த கல்லின்மேல்