நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இன்னும் எத்தனை தூரம்

Innum Eththanai Thooram

Moses Rajasekar

இன்னும் எத்தனை தூரம்

பயணம் செய்யணும் நாதா

இன்னும் எத்தனை காலம்

பாடுகள் நாதா – 2

என்னால் முடியவில்லை

முடியவில்லை தேவா

உம் பெலன் தாங்க வேண்டும் நாதா – 2

நாதா இயேசு தேவா

தேவா இயேசு தேவா…. – 2

கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் – 2

உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே

விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் – 2

வழுமாமல் வழி நடத்தி செல்லணும்

என் தேவனே

நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்

அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்

ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே – 2

அலைபோல் வெள்ளம் என் மேல்

புரண்டு வந்தாலும்

மலை போல் வந்து நின்று தடுக்கும்

என் தேவனே – 2

நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்

உறவுகள் உதறு போது உந்தன் மார்பில்

சாய்குவேன்

விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம்

சேருவேன்

மார்போடு அணைத்து என்னை முத்தமிடும்

தெய்வமே

மறவாத உந்தன் அன்பை நினைத்து நான்

ஏங்குவேன்

நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்